Local

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு! குடும்பஸ்தர் துடிதுடித்துப் பலி!!

மாத்தறை, ஊறுபொக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து உயிரிழந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை காலை 9.25 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த ஒருவர் மீது இனந்தெரியாத நபர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஹூலங்கந்த, தம்பாஹல பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அகுரெஸ்ஸ வத்த, வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான ஈ.எஸ். சமிந்த தயாரத்ன (வயது 44) எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் பஸ்கொட பிரதேச செயலகத்தில் கடமையாற்றுபவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஊறுபொக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading