LocalSports

இலங்கையின் சிரேஷ்ட வீரர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஹரீன்!

இலங்கை கிரிக்கெட் அணிக்குள் சிரேஷ்ட வீரர்களான லசித் மலிங்கவுக்கும், திசர பெரேராவுக்கும் இடையிலான பிரச்சினை மேலும் வலுவடைந்துள்ளது.

இந்நிலையில், அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மும்முரமாக செயற்பட்டு வருகின்றார்.

இந்தநிலையில், இலங்கை அணிக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை விரைவில் நிறைவுக்குக் கொண்டுவரும் நோக்கில் லசித் மலிங்க, அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் திசர பெரேரா ஆகிய சிரேஷ்ட வீரர்களை ஒரே மேசையில் வைத்து சந்தித்து உடனடித் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

“தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க முடியும் என நம்புகிறேன். நாங்கள் இலங்கையர்கள். எமக்குள் ஒருசில பிரச்சினைகள் இருக்கலாம். அதற்காக நாங்கள் ஏன் சண்டைபிடிக்க வேண்டும்? அவ்வாறு சண்டை பிடித்தாலும் நாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து மீண்டும் ஒன்று சேர்ந்துவிடுவோம்” என்று அமைச்சர் ஹரீன் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading