Local

தேசிய அரசாங்கத்தை அமைத்தே தீருவோம் ! ஐ.தே.க. திட்டவட்டம்

நிலையானதொரு தேசிய அரசாங்கம் இம்முறை அமைக்கப்பம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கோட்டை சிறி பரகும்பா பிரிவெனாவின் வருடாந்த பரிசளிப்பு விழாவின், பின்னர் ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு  கூறினார்.

” நாட்டு மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்காகவும்,  அபிவிருத்தி செயற்திட்டங்கள் இடைநடுவில் தடைப்படாமல் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்காகவுமே தேசிய அரசாங்கம் நிறுவப்படவுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் ஏற்கனவே ஆட்சிபுரிந்த தேசிய அரசாங்கத்தின் பெரும்பான்மை கூட வேறு கட்சிகளின் ஆதரவிலேயே தங்கியிருந்தது.

அதேபோன்று தற்போது நிறுவவுள்ள தேசிய அரசாங்கத்தை வேறு கட்சிகளின் ஒத்துழைப்புடன் அமைப்போம்.

அரசாங்கத்தின் பலமமான தன்மைக்கு பாராளுமன்றத்தின் 113 பேரின் ஆதரவு அத்தியாவசியமாகும்.

நாட்டின் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏற்கனவே காணப்பட்ட தேசிய அரசாங்கத்தை போலன்றி நிலையான தேசிய அரசாங்கமொன்றை நிறுவுவோம்.” என்றும் அமைச்சர் கூறினார்.

அதேவேளை. சுதந்திர தின உரையின்போது, ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அரசமைக்கும் யோசனையை ஜனாதிபதி நிராகரித்திருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading