World

வீட்டின் மீது வீழ்ந்தது விமானம்! அமெரிக்காவில் 5 பேர் மரணம்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சிறியரக விமானம் வீட்டின் மீது மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரேஞ்ச் கவுண்டியில் இருக்கும் புல்லர்யடன் விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது.

இந்த விமானத்தில் ஒரு விமானி மட்டுமே இருந்தார். யோப்ர லிண்டா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்குள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது.

அதனைத் தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது.

இந்தக் கோர விபத்தில் விமானி மற்றும் வீட்டில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading