Local

ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து உடன் தேர்தலை நடத்துங்கள்! – வலியுறுத்துகின்றார் மஹிந்த

ஜனநாயகம் குறித்துப் பேசுவோர், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து பழைய முறைமையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்த இணங்குவதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உரிய காலப்பகுதியினுள் தேர்தல் நடத்தப்படும் எனக் கூறி ஆட்சியைக் கைப்பற்றிய அரசு தற்போது மக்களின் எதிர்பார்ப்புக்களைச் சிதறடிக்கின்றது.

புதிய தேர்தல் முறைமை மூலம் சிறந்த நன்மைகளைப் பெறமுடியும். அதற்கான செயற்பாடுகளை அரசு மேற்கொள்ளவில்லை.

எனினும், அந்த நன்மைகளைத் தவிர்த்து ஜனநாயகத்துக்காகப் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுக்கத் தயாராகவுள்ளோம். அதற்கு அரசு தயாராக வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading