Entertainment

I Phone வாங்க குழந்தையை விற்ற பெற்றோர்!

மேற்கு வங்காள மாநிலத்தில் 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை தம்பதியினர் சமூக வலைதள மோகத்தால் விற்பனை செய்துள்ளனர்.
குறித்த மாநிலத்தில் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஷதி, ஜெயதேவ் என்கிற தம்பதியினரே இவ்வாறு குழந்தையை விற்பனை செய்துள்ளனர்.
அதுவும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக ஐபோன் வாங்குவதற்காக இந்த செயலை குறித்த தம்பதியினர் செய்துள்ளனர்.
நெருக்கடியில் இருந்த தம்பதியினர் திடீரென ஐபோன் வாங்கியதை அக்கம்பக்கத்தினர் கவனித்து இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து பொலிஸார் குழந்தையை விற்ற தாய் ஷதி மற்றும் வாங்கிய பிரியங்கா கோஷ் என்ற பெண் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மேலும், தலைமறைவாக உள்ள குழந்தையின் தந்தை ஜெயதேவை பொலிஸார் தேடி வருகின்றனர்.
குழந்தையை விற்று பணத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்கினோம் என்று ஒப்புதல் அளித்து உள்ளார்.
அதிர்ச்சியூட்டும் வகையில் முதலில் 7 வயது மகளை தந்தை விற்க முயன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading