Local

நான் கெட்டவனில்லை! – ஐ.நாவே நற்சான்றிதழ் வழங்கியதாம் என்கிறார் கோட்டா

“என்னை எல்லோரும் கெட்ட மனிதன் என்கின்றனர். ஆனால், நான் கெட்ட மனிதனில்லை. ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியே அதற்கான சான்றிதழை வழங்கியுள்ளார்.”

– இவ்வாறு முன்னாள் பாதுகாப்புச் செயலரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“என்னை எல்லோரும் கெட்ட மனிதன் என்று கூறுகின்றனர். ஐ.நாவின் இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியுடன் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் சந்திப்புக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி என்னுடன் இரண்டரை மணி நேரம் உரையாடினார். அதன் பின்னர் நான் கெட்ட மனிதன் இல்லை என்பதை அவர் கூறினார்” என்று கோட்டாபய மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading