World

குடும்பக் கட்டுப்பாட்டையடுத்து சீனாவில் மக்கள் தொகை குறைந்தது!

குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கட்டாயமாக அமல்படுத்தியதன் மூலம் 70 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளது.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதன்மையான நாடாக சீனா விளங்குகின்றது.

அதிக மக்கள் தொகையால் பல்வேறு இன்னல்களைச் சந்தித்த அந்நாடு ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்பது உட்பட பல கடுமையான விதிமுறைகளைக் கடந்த 10 ஆண்டுகளாகக் கடைபிடித்து வருகின்றது.

இதன் காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு முதன்முறையாக அங்கு மக்கள் தொகை குறைந்துள்ளது.

இந்தத் திட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னர் ஆண்டுக்கு 25 இலட்சமாக இருந்த குழந்தை பிறப்பு இப்போது ஆண்டுக்கு 7 இலட்சத்து 90 ஆயிரமாக குறைந்துள்ளது.

இதனால் சீனாவின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், சமூக அமைப்பில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading