World

சோகத்துடன் பிறந்தது புதுவருடம் – ஈராக்கில் படகு கவிழ்ந்ததில் 70 பேர் பலி!

ஈராக்கில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.

ஈராக் நாட்டில் புதுவருடத்தினை முன்னிட்டு பொதுமக்கள் அதனை வரவேற்கும் வகையில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மொசூல் நகரருகே டைக்ரிஸ் ஆற்றில் சென்று கொண்டிருந்த படகில் இருந்தவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.  இதனால் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 71 பேர் வரை பலியாகி உள்ளனர்.  19 குழந்தைகள் உள்பட 55 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  படகில் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்தது நெரிசல் ஏற்படுத்தி உள்ளது.
இதனுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டபொழுது படகு கவிழ்ந்து உள்ளது.  படகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விபத்து நடந்துள்ளது.
படகில் இருந்த பயணிகளை மீட்க அந்த பகுதியில் வேறு படகுகளும் இல்லை.  தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading