Technology

600 மில்லியன் பேரின் ‘பேஸ்புக் பாஸ்வேட்’…?

மில்லியன் கணக்கான பேஸ்புக் பயனர்களின் கடவுச்சொல் (பாஸ்வேர்ட்)  அந்நிறுவனத்தில் பணியாற்றும் 20,000 ஊழியர்களால் மிகச் சுலபமாக அணுகும் வகையில் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பேஸ்புக் நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு குறைப்பாட்டை, பாதுகாப்பு வல்லுநர் பிரையன் கிரெப்ஸ்தான் முதலில் சுட்டிக்காட்டினார்.  பேஸ்புக்கை பயன்படுத்தும் 600 மில்லியன் பயனர்களின் லாகின் பாஸ்வேர்ட்கள் ( Log in) வெறும் சாதாரண எழுத்து வடிவில் சேகரிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டிலிருந்து லொகின் பாஸ்வேர்ட்கள் இவ்வாறு வெளியாகியிருக்கலாம் என்கிறார் பிரையன்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள  பேஸ்புக் நிறுவனம், தங்கள் நிறுவனத்திற்குள்ளான நெட்வர்க்கில் பாஸ்வோர்ட்கள் குறித்த கோளாறு ஒன்றை சரி செய்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து, பிரையன் பேஸ்புக்கின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விரிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading