Local

இலங்கையின் அரசியல் நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கின்றது இந்தியா! – வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவிப்பு

இலங்கையின் அரசியல் நிலவரங்களை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம், சிறிலங்காவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், இந்தியா முதல் முறையாக இன்று கருத்து வெளியிட்டுள்ளது.

“இலங்கையின் அண்மைய அரசியல் நிலவரங்களை இந்தியா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. ஜனநாயக மற்றும் நெருக்கமான நட்பு அயல் நாடு என்ற வகையில், ஜனநாயக பெறுமானங்கள் மற்றும் அரசமைப்பு செயல்முறைகள் மதிக்கப்படும் என்று நம்புகின்றோம். இலங்கை மக்களுக்கான அபிவிருத்தி உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும்” என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading