Sports

IPL ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து வீரர்கள்!

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் வீரர்கள் ஏலத்தின் முதல் நாள் பல புதிய ஏல சாதனைகளுடன் முடிவடைந்தது.

அதன்படி இம்முறை பிரீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகை செலுத்தி வீரரை வாங்கிய சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி பெற்றுள்ளது.

அந்த அணி இங்கிலாந்தின் சகலதுறை ஆட்டகாரரான சாம் கரனை 18.25 கோடிக்கு (இந்திய ரூபாய்) வாங்கியது.

16-வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெற்றது. இதில் பல வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.

இதற்கிடையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸால் 16.25  கோடிக்கு (இந்திய ரூபாய்) வாங்கப்பட்டார்.

அவுஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் 17.50  கோடிக்கு (இந்திய ரூபாய்)  மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

தமிழக வீரர் ஜெகதீசனை, 90 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதேபோல இந்திய வீரர் நிஷாந்த் சிந்துவை சென்னை அணி 60 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்திய வீரர்கள் சன்வீர் சிங்கை ஐதராபாத் அணி 20 லட்சத்திற்கும், ஷேக் ரஷீத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடிப்படை விலையான 20 லட்சத்திற்கும், விவ்ராந்த் சர்மாவை, ஐதராபாத் அணி 2.6 கோடிக்கும், இந்திய இளம் வீரர் உபேந்திர யாதவை, ஐதராபாத் அணி 25 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுத்தன. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading