Sports

IPL போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் கிறிஸ் கெய்ல் சாதனை!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் கிறிஸ் கெய்ல் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினார். பின்னர் சுதாரித்துக்கொண்ட அவர் சிக்ஸர்களை பறக்கவிட்டார். பென் ஸ்டோக்ஸ் வீசிய 8-வது ஓவரில் மிட் விக்கெட் திசைக்கு மேல் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். இது ஐபிஎல் வரலாற்றில் கெயிலின் 350-வது சிக்ஸர் ஆகும். 9வது ஓவரில் கடைசி பந்தில் திவேட்டியா ஓவரில் ஒரு (351வது) சிக்ஸரை பறக்கவிட்டார். தொடர்ந்து அதிரடியை காட்டிய கெய்ல், ரியான் பராக் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 133 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெய்ல் 351 சிக்ஸர்களை பதிவு செய்துள்ளார். இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மட்டும் 239 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்களை பதிவு செய்த வீரர் என்ற சாதனையும் கெய்ல் வசம் தான் உள்ளது. 2013-ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 17 சிக்ஸர்களை விளாசியிருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்  பட்டியலில் இவருக்கு அடுத்தபடியாக ஏபி டிவில்லியர்ஸ் இருக்கிறார். இவர் 235 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இவருக்கு அடுத்த படியாக 204 போட்டிகளில் 216 சிக்ஸர்களை கூல் கேப்டன் தோனி பறக்கவிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading