Sports

IPL போட்டியில் 4.60 கோடி ரூபாவுக்கு ஏலம் போன இலங்கை வீரர்!

இலங்கையின் வேகப்பந்தவீச்சாளர் தில்ஷன் மதுஷங்கவை மும்பை அணி 4.60 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கான ஏலம் டுபாயில் இன்று இடம்பெற்று வருகிறது.

இந்த ஏலத்தில் தற்போதுவரை அதிக விலைக்கு ஏலம் போன வீரராக அவுஸ்ரேலிய அணியின் வீரர் மிச்செல் ஸ்டார்க் பதிவாகியுள்ளார். இவரை கொல்கத்தா நைட் ரைடேர்ஸ் அணி 24.75 கோடிக்கு வாங்கியுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் இருந்து 8 வீரர்கள் இம்முறை ஐ.பி.எல். ஏலத்துக்கு தெரிவாகினர். அதில் குசல் மெண்டிஸ் ஏலம் போகவில்லை.

வனிது ஹசரங்க 1.8 கோடிக்கு ஏலம் போனார். அதற்கு அடுத்தபடியாக தில்ஷன் மதுஷங்க 4.60 கோடிக்கு ஏலம் போயுள்ளார்.

நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண தொடரில் தில்ஷன் மதுஷங்க, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தில்ஷன் மதுஷங்க 31 விக்கெட்டுகளையும் 11 டி20 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading