Local

ராஜபக்ச தலைமுறையை குடும்ப உறுப்பினர் அழித்து விடுவார் என பிரபல சோதிடர் தெரிவிப்பு!

ராஜபக்ச குடும்பத்தின் சகோதரர் ஒருவர் முழு ராஜபக்ஷ தலைமுறையையும் அழித்துவிடுவார் என பிரபல சோதிடர் ஒருவர் குறிப்பிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

2001ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்குச் சென்று அந்த சோதிடரை சந்தித்த போது இந்த கணிப்பை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

கோட்டாபய ராஜபக்ச பற்றி சோதிடம் கூறப்படவில்லை எனவும் பசில் ராஜபக்ச பற்றி கூறப்பட்டது எனவும் அவர் கூறினார்.

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த மகிந்த ராஜபக்சவின் அரசாங்கமும், 2019ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கமும் பசில் ராஜபக்ஷவினால் அழிக்கப்பட்டதாக அந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ராஜபக்ச அரசாங்கங்களை அழித்த பசில் ராஜபக்ச, எஞ்சிய அரசாங்கங்களையும் அழிக்க முன்வர முயற்சிக்கிறார் எனவும் அவர் கூறினார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading