World

IT வேலையை தூக்கி வீசிட்டு கழுதை வளர்த்து இலட்சாதிபதியான பட்டதாரி!

கர்நாடக மாநிலத்தில் ஐடி வேலையை விட்டுவிட்டு கழுதை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் நபர் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டிவருகிறார். 

கர்நாடகாவின் தட்சிண கன்னடா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் கவுடா.

BA பட்டதாரியான கவுடா, 2020 ஆம் ஆண்டில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியிலிருந்து விலகிய பிறகு ஐரா கிராமத்தில் 2.3 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த விவசாயம், கால்நடை பராமரிப்பு, கால்நடை சேவைகள், பயிற்சி மற்றும் தீவன மேம்பாட்டு மையமான ஐசிரி பண்ணையை தொடங்கினார்.

ஏற்கனவே முயல்கள் மற்றும் கடக்நாத் கோழிகளை வளர்க்கும் அந்த பண்ணையில் கழுதைகளையும் வளர்க்க திட்டமிட்டிருக்கிறார்.

அதன்படி குறித்த நபர் 20 கழுதைகளை அவர் வாங்கி வளர்க்க துவங்கியுள்ளார்.

இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை குறைவு என்பதால் கழுதை பால் வியாபாரம் செய்ய நினைத்த இவருக்கு நல்ல நல்ல லாபமும் கிடைத்திருக்கிறது.

சந்தையில் 30 மிலி கழுதை பால் 150 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதனை கவனித்த கவுடா, தன்னுடைய கழுதை பால் வியாபாரத்தை பெரிதுபடுத்தியுள்ளார்.

தற்போது அவருக்கு ஒரு மாதத்திற்கு 17 லட்ச ரூபாய்க்கும் அதிகமான ஆர்டர்கள்  கிடைக்கின்றது. அதில் அவர் லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading