FeaturesLead NewsLocal

மூக்குடைபட்டார் விக்கி! டெனீஸ்வரனை நீக்கியது தவறு!! – மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண அமைச்சராக இருந்த பா.டெனீஸ்வரனை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது தவறு என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தம்மை அமைச்சர் பதவியில் இருந்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீக்கியதற்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பா.டெனீஸ்வரன் தொடர்ந்த வழக்கிலேயே இன்று இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய முறை சட்டத்துக்குப் புறம்பானது என்றும், அவரை நீக்கிவிட்டு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்ட முறையும் சட்டவிரோதமானது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான மகிந்த அபயவர்த்தன, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, இந்த வழக்குக்கான செலவீனங்களை சி.வி.விக்னேஸ்வரனே செலுத்த வேண்டும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைச் செயற்படுத்தத் தவறியதால், நீதிமன்ற உத்தரவை அவமதித்தார் என விக்னேஸ்வரனுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading