LocalNorth

நல்லூர் கந்தசுவாமி திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி மாலை 5 மணிக்கு வைரவர் உற்சவத்துடன் திருவிழா நிறைவுக்கு வரும்.

அனைத்து ஏற்பாடுகளுடனும் திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது. பாதுகாப்புச் சோதனைகள் அமைக்கப்பட்டு சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆலயச் சூழலில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆலயத்துக்கான வீதிகளில் வாகனத் தடைகள் ஏற்படுத்தப்பட்டு, மாற்று வீதி ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading