LocalNorth

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை தொகுதி தலைவராக சுமந்திரன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை தொகுதிக்கான நிர்வாகிகள் தெரிவு இன்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவுசெய்யப்படடார்.

அதேவேளை, சட்டத்தரணி யோ.குகதாஸ் செயலாளராகவும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் பொருளாளராகவும் தெரிவாகினர்.

இந்தநிகழ்வில் பருத்தித்துறை நகரபிதா யோ.இருதயராஜா, பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா.அரியகுமார் ஆகியோர் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading