LocalNorth

யாழ். இந்துக் கல்லூரி வடக்கில் முன்னிலை!

வெளியாகியுள்ள ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 23 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

அதேவேளை, யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் 13 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 7 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

கொக்குவில் இந்துக் கல்லூரியில் 6 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப் பெற்றனர்.

யாழ். இந்துக் கல்லூரியில் கணிதப் பிரிவில் 13 மாணவர்கள் தமிழ்மொழி மூலத்திலும், 3 மாணவர்கள் ஆங்கில மொழி மூலத்திலும் சித்தியடைந்துள்ளனர்.

உயிரியல் பிரிவில் 3 பேர் ஆங்கில மொழி மூலத்திலும், 3 பேர் தமிழ்மொழி மூலத்திலும் 3 ஏ பெற்றுள்ளனர். வர்த்தகப் பிரிவில் ஒருவர் 3 ஏ சித்தி பெற்றுள்ளார்.

இதேவேளை, தென்மராட்சி கல்வி வலயத்துக்குட்பட்ட சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி சிங்கராசா நிலக்சனா கலைப் பிரிவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். தேசிய ரீதியில் அவர் 28ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவி எஸ். சாம்பவி வர்த்தக பிரிவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் வேம்படி உயர்தரப் பெண்கள் பாடசாலை மாணவி அ.அருள்மொழி, உயிரியல் பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.

வலிகாமம் கல்வி வலயத்தில் கந்தரோடை ஸ்கந்தவரோதய கல்லூரி மாணவி ரவிச்சந்திரன் கலெக்சியா உயிர்முறைமைகள் தொழிநுட்பவியல் பிரிவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading