Jaffna Kings தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றியது!

லங்கா பிரீமியர் லீக் (LPL) 2022 ஆம் ஆண்டு தொடரின் இறுதிப் போட்டியில் Jaffna Kings தொடர்ச்சியான மூன்றாவது முறையாகவும் வெற்றி வாகை சூடியிருக்கின்றது.
Colombo Stars அணியை எதிர்கொண்ட Jaffna Kings அணி இரண்டு விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (23) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற Jaffna Kings அணி முதலில் பந்துவீசுவதற்கு தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Colombo Stars அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அந்த அணி சார்பாக தினேஸ் சந்திமல் 49 ஓட்டங்களையும், ரவி போப்பரா 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதனையடுத்து, 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
Jaffna Kings சார்பாக அவிஷ்க பெர்ணான்டோ 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்த வெற்றியின் ஊடாக லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் மூன்றாவது முறையாகவும் Jaffna Kings அணி சம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
