LocalNorth

யாழ். போதனா வைத்தியசாலையில் மறுவாழ்வு சிகிச்சை நிலையம் திறப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குவைத் நாட்டின் செம்பிறைச் சங்கத்தின் 530 மில்லியன் ரூபா நன்கொடை நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட மறுவாழ்வு சிகிச்சை நிலையம் சம்பிரதாய பூர்வமாக நேற்று (25) திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிலையத்தை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, குவைத் செம்பிறைச் சங்கத் தலைவர் மருத்துவர் ஹிலால் முசேட் அல்சேயர், இலங்கைக்கான குவைத் நாட்டுத் தூதுவர் கலாவ்ப்பூதாஃயர், சிங்கப்பூர் சுகாதார சேவை தலைமை நிறைவேற்று அதிகாரி மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர்.

இந்த நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட்டும் கலந்து சிறப்பித்ததுடன் விசேட உரையையும் நிகழ்த்தினார்.

மேலும், இந்த நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழியர்கள், தாதியர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading