Local

5 சடலங்கள் உறவினர்களிடம் மாறிச் சென்றதால் களுத்துறை வைத்தியசாலையில் பதற்றம்! – ராஜித உடன் தலையீடு

களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்த 05 சடலங்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்போது அதிகாரிகளால் மாறி வழங்கப்பட்டமை தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சுகாதார அமைச்சு ராஜித சேனாரத்னவால் இது தொடர்பில் சுகாதாரப் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலம் மாறி வழங்கப்பட்ட உறவினர் ஒருவர் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு அறிவித்ததையடுத்து இது தொடர்பில் விசாரிப்பதாகப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

அதேநேரம் சடலங்கள் மாறி வழங்கப்பட்டது தொடர்பாக களுத்துறை பொது வைத்தியசாலை வளாகத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உடன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள சுகாதார அமைச்சர் தவறு இழைக்கப்பட்டிருந்தால் அதற்குறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி வழங்கியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading