Local

KOHOMADA SUDU என்ற SMS ஏற்படுத்திய கத்திக்குத்தால் 8 பேர் வைத்தியசாலையில்!

அயல் வீட்டினை சேர்ந்த திருமணமான 25 வயது இளைஞனுக்கு kohomada sudu ( how are you darling? )என்று sms அனுப்பிய திருமணமான பெண்ணினால் 8 பேர் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளார்கள்.

தனது மனைவி அனுப்பிய sms ஐ பார்த்த 35 வயதான கணவன் இது குறித்து மனைவியிடம் வினவிய போது தவறுதலாக அனுப்பியதாக சமாளித்துள்ளார்.

கோபமடைந்த கணவன் அயல் வீட்டு இளைஞரிடம் ஏற்கனவே தனது மனைவியுடன் தொடர்பு உள்ளதா என கேட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாய்த்தர்க்கம் முற்றி இரு வீட்டாருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு கத்திக் குத்தில் முடிந்துள்ளது.

கத்திக் குத்துக்கு இலக்கான 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இரு வீட்டு கணவன்மார்களும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவம் பொரளையில் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading