LocalNorth

வடக்கின் சில பகுதிகளில் எலிக் காய்ச்சல் அபாயம்!

வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் வவுனியாவில் 26 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எலிகள் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் மூலமாகவே லேப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் நோய் பரவுகின்றது.

இலங்கையில் ஏனைய மாவட்டங்களில் இந்த நோயின் தாக்கம் பரவலாகக் காணப்பட்டாலும் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை சற்றுக் குறைவானதாகவே காணப்படுகின்றது.

எனினும், மன்னார் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாகாணங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading