World

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை முதல் கட்டத்தில் நடத்தக் கோரிக்கை!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை முதல் கட்டத்தில் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. கடிதம் வழியே கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்திற்கான மக்களவைத் தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும்போது அது கோடை காலம் என்பதனால் பொதுமக்களுக்கு அதிக சிரமம் ஏற்படும்.

இதனை முன்னிட்டு தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை முதல் கட்டத்தில் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. கடிதம் எழுதியுள்ளது.

இதுபற்றி அக்கட்சியைச் சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் வேணுகோபால் எழுதியுள்ள கடிதத்தில் தேர்தல் நடைபெறக்கூடிய கோடை காலத்தில் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் தேர்தலை முதல் கட்டத்திலேயே நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading