சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கல்: வெளியாகிறது 1,195 இந்தியர் விபரம்
எச்.எஸ்.பி.சி. (HSBC) வங்கியின் சுவிஸ் கிளையில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் விவரத்தை வழங்க சுவிற்சர்லாந்து ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள 628 இந்தியர்களின் பட்டியலை பிரான்ஸ் அதிகாரிகள் வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு பத்திரிகை அமைப்புகள் ஒன்றிணைந்து சுவிஸ் வங்கிகளில் 2006 – 2007ஆம் ஆண்டில் ஆயிரத்து 195 இந்தியர்கள் ரூ.24,420 கோடிக்கு கணக்கு வைத்திருப்பதைக் கண்டறிந்தனர்.
இதில் 276 பேரின் கணக்குகளில் மட்டும் ஒரு மில்லியன் டொலருக்கும் அதிகமாக பணம் பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், சுவிற்சர்லாந்தின் லோசானில் உள்ள நீதிமன்ற உத்தரவையடுத்து கணக்கு விவரங்களைப் பரிமாறுவது குறித்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது விவரங்களை வெளியிட அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது.
