Local

புதிய அரசமைப்பை நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்! – மஹிந்த அணி விடாப்பிடி

நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

“ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன், புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒருபோதும் இடமளிக்காது.

புதிய அரசமைப்பு தேவையா அல்லது அரசமைப்பில் திருத்தம் செய்ய வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

அரசமைப்பு மாற்றத்துக்கு, மக்களின் ஆணையை அரசு பெற வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading