Local

சிறிமேவன் ரணசிங்கவிடமிருந்து வாளைப் பெற்றார் பியால் சில்வா!

இலங்கை கடற்படையின் 23 ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா நேற்று பொறுப்பேற்றுள்ளார்.

கடற்படைத் தலைமையகத்தில் நடந்த நிகழ்வில் அவர் தனது கடமைகளை ஏற்றுக் கொண்டார்.

பதவியில் இருந்து ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, கடற்படைத் தளபதிக்குரிய உத்தியோகபூர்வ வாளை, வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவிடம் கையளித்தார்.

இதையடுத்து, அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவை வழியனுப்பும் நிகழ்வும், புதிய கடற்படைத் தளபதிக்கான வரவேற்பு மற்றும் பதவியேற்பு நிகழ்வும் இடம்பெற்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading