Local

50 நாட்களுக்குள் நாட்டை நாசமாக்கினார் மஹிந்த! – சஜித் குற்றச்சாட்டு

50 நாட்கள் அரசியல் நெருக்கடியின்போது, பிரதமராகப் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டார் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

வறிய மக்களுக்காக வீடுகளை அமைப்பதற்கு, வீடமைப்பு அமைச்சுக்காக ஒதுக்கப்பட்ட 2600 மில்லியன் ரூபா இந்தக் காலகட்டத்தில் திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அடுத்த ஒரு ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

2015இல் இரண்டு பேரும் இணைந்து பணியாற்றுவதற்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். இது இரட்டை அதிகாரம். யாரும் தனி ஆதிக்கம் செலுத்த முடியாது” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading