Lead NewsLocal

அதிர்ந்தது கிராண்ட்பாஸ்! துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; மூவர் படுகாயம்!!

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நால்வர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹேனமுல்ல பகுதியை சேர்ந்த 32 வயதுடைய தினேஷ் எரங்க என்பவரே உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading