Lead NewsLocal

வீதிப் பெயர்ப் பலகைகளில் தமிழை அகற்றுவோரை உடனே கைதுசெய்க! – பொலிஸாருக்கு மஹிந்த உத்தரவு

தென்னிலங்கையில் வீதிகளின் பெயர்ப்பலகைகளில் உள்ள தமிழ்மொழியை அகற்றியவர்கள் தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பித்து அவர்களைக் கைதுசெய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாணந்துறை மற்றும் கெரவலப்பிட்டிய ஆகிய பகுதிகளில் உள்ள வீதிகளின் பெயர்ப்பலகையில் உள்ள தமிழ்மொழி இனவாதிகளினால் கடந்த சில நாட்களில் அகற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியதுடன், ஆட்சி மாற்றத்தின் பின் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் பேரினவாத சக்திகளின் ஆட்டம் ஆரம்பம் என்று சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வந்தனர்.

இந்தநிலையில், வீதிகளின் பெயர்ப்பலகைகளில் உள்ள தமிழ்மொழியை அகற்றியவர்கள் தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பித்து அவர்களைக் கைதுசெய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று மாலை இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading