Lead NewsLocal

ரணிலின் செயலாளரை நீக்கினார் மைத்திரி! – கொந்தளிக்கின்றது கொழும்பு

அரசமைப்பின் பிரகாரம் தானே பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரணில் விக்கிரமசிங்க கடிதம் மூலம் அறிவித்திருந்தார். எனினும், ரணில் 2015ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்றபோது நியமிக்கப்பட்ட செயலாளரை ஜனாதிபதி மைத்திரி நீக்கியுள்ளார் எனத் தெரியவருகின்றது.

பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது.

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் பரிந்துரைக்கு அமைய புதிய செயலாளரை நியமிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

மைத்திரியின் இந்த நடவடிக்கை கொழும்பு அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading