Lead NewsLocal

சபையைக் கூட்டுங்கள்! பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவேன்!! – ரணில் சவால்

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் தனது பக்கமே தொடர்ந்து இருக்கின்றன எனவும், அரசமைப்பின் பிரகாரம் தானே பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிக்கின்றேன் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை உடன் கூட்டினால் அங்கு பெரும்பான்மையைத் தான் நிரூபித்துக் காட்டுவேன் எனவும் அவர் கூறினார்.

அலரிமாளிகையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது நடைபெறுகின்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், மனோ கணேசன், சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading