Local

பதறுகின்றதா மைத்திரி – மஹிந்த கூட்டணி? பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க வேண்டியது கட்டாயமல்ல என்கிறார் சமரசிங்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கூட்டினாலும் கூட, புதிய அரசு பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அரச இணைப்பேச்சாளரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“நாட்டின் அரசமைப்பின்படியே ரணில் விக்கிரமசிங்கவின் பதவி நீக்கமும், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவின் நியமனமும் மேற்கொள்ளப்பட்டது.

இதில் யாருக்காவது பிரச்சினை இருந்தால், உயர்நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்து தீர்ப்பைப் பெற முடியும்.

அரசமைப்பில் எந்த இடத்திலும், 113 உறுப்பினர்களின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. எனவே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க வேண்டியது கட்டாயமல்ல.

எனினும், 113 இற்கும் அதிகமான பெரும்பான்மையை எம்மால் காட்ட முடியும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading