Local

மைத்திரியின் முடிவு சரியானது! பெரும்பான்மையை நிரூபித்தாலும் ரணிலுக்குப் பிரதமர் பதவியை வழங்கோம்! – கம்மன்பில சூளுரை

நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்தாலும், அவருக்கு நாங்கள் பிரதமர் பதவியை வழங்கமாட்டோம் என்று சூளுரைத்துள்ளார் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“நாடாளுமன்றம் கூடவுள்ளதால் பெரும்பான்மையை காண்பிப்பதற்கு சாத்தியம் இல்லை.

ஜனாதிபதிக்குப் பிரதமரை நீக்கும் அதிகாரம் உள்ளது அல்லது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து, பெரும்பான்மை வாக்குகளின் மூலம் நிறைவேற்றி அகற்ற முடியும்.

ஆனால், அரசமைப்பில் எந்த இடத்திலும், நாடாளுமன்றப் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால்தான் பிரதமர் பதவியைப் பெற முடியும் என்று கூறப்படவில்லை” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading