சுதந்திர தின நிகழ்வில் கடினப்பட்டு சிரித்துக்கொண்ட மைத்திரி – ரணில்
இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் இன்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் மாலைதீவின் ஜனாதிபதி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த நிலையில், இலங்கையின் பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இரு கரம் கூப்பி வரவேற்றார்.
இந்த வரவேற்புப் புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன், இது குறித்து பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஒக்டோபர் 26 அரசியல் சதியானது முறியடிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றபோதும் அரசியல் முறுகல் நிலை தீராத நிலையிலேயே உள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த வரவேற்பானது சம்பிரதாயத்திற்காக மாத்திரம் மேற்கொள்ளப்பட்டபோதும், ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் கடினப்பட்டு சிரித்துக்கொண்டனர் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

