Local

மைத்திரி – கூட்டமைப்பு சந்திப்பு நடக்கவில்லை!

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று புத்தாண்டு நிகழ்வுகள் நடைபெற்றன. அதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே பேச்சு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் நேற்று அவ்வாறான சந்திப்பு நடைபெறவில்லை.

புத்தாண்டு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடுவர் என்றும், அதிகாரப் பகிர்வு ஆவணம் தொடர்பாக ஆராயும் கூட்டத்தை ஏற்பாடு செய்வது தொடர்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் பேச இருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புத்தாண்டு நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். எனினும், ஜனாதிபதியுடனான தனிப்பட்ட சந்திப்பு நேற்று நடக்கவில்லை. நிகழ்வில் கலந்துகொண்ட இரா.சம்பந்தன் சிறிது நேரத்திலேயே அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading