LocalNorth

பருத்தித்துறை விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிப் பகுதி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பலத்த காயமடைந்த குடும்பஸ்தர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போதே உயிரிழந்துள்ளார்.

2ஆம் குறுக்குத் தெரு, பருத்தித்துறையைச் சேர்ந்த ம.புவிகரன் எனும் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading