Local

கஞ்சிப்பானை இம்ரானின் சகா மாளிகாவத்தையில் கைது!

பாதாள கோஷ்டி உறுப்பினரான கஞ்சிபானை இம்ரானின் முக்கிய சகாவென கருதப்படுபடும் இளைஞர் ஒருவர் இன்று ( 13) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தையில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய விசேட தேடுதலின்போதே இவர் சிக்கியுள்ளார்.

கஞ்சிப்பானை இம்ரானின் ஆலோசனையின் பிரகாரம் இலங்கையில் நிதி திரட்டும் செயற்பட்டை  36 வயதுடைய குறித்த இளைஞர்  முன்னெடுத்து வந்தார் என கூறப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, மாகந்துர மதூஷின் ஆசைநாயகயின்  சித்தி வீட்டில் இருந்து இரண்டு வாகனங்களை பொலிஸ் விஷேட அதிரடி பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுனுவல, கோனவில பகுதியில் உள்ள வீட்டில் இருந்த குறித்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading