Business

மொபிடலுக்கு தங்க விருது!

‘We Care. Always’ என்ற தமது தொனிப்பொருளுக்கு இணங்க தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையை அதிஉன்னத தரத்திற்கு உயர்த்தியுள்ளமையின் விளைவாக கடந்த SLIM Brand Excellence 2018 விருது வழங்கும் நிகழ்வின்போது தொடர்ந்தும் இரண்டாவது முறையாக வருடத்தின் சேவைகளுக்கான சிறந்த வர்த்தக நாமம் என்ற பிரிவில் தங்க விருதினை மொபிடெல் வென்றது.

SLIM Brand Excellence விருதுகள் ஆனது தேசிய அளவில் சிறந்த வர்த்தக நாமங்களினை கொண்டாடுவதும் அதிசிறந்த சந்தையாளர்களின் அதிசிறிந்த முயற்சிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவதும் ஆகும்.

இவ்வுன்னத விருதை தொடர்ந்தும் இரண்டாவது முறையாக வென்றுள்ளமை சராசரியான சாதனையன்று. நிலையான சிறப்புத் தன்மை மற்றும் மாறிவரும் தொழிற்துறையில் வெளிப்புற சவால்களுக்கு மத்தியில் விரிவாக்கம் என்பன தேவைப்படுகின்றன.

உண்மையில் SLIM Brand Excellence  விருதுகள் இத்தொழிற்துறையில் உந்துதல், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு அங்கிகாரம் அளிக்கிறது. சிறந்த சந்தையாளர்களான மொபிடெல் குழுவினைப் போன்ற வாத்தக நாம((Brand) ) சாம்பியனை கட்டமைப்பதில் இது புலப்படுகிறது. பொருளாதாரத்தில் உந்துசக்தியை விற்பனை செய்வதற்கான SLIMஇன் முயற்சிகள் ஒரு நிறுவனத்துக்கு சந்தைப்படுத்தல் உத்திகளின் முக்கியத்துவம் மற்றும் அதன் நேரடி நன்மைகள் போன்ற காரணிகளை மதிப்பீடு செய்வதை உறுதி செய்கிறது.

மொபிடெல் உடன் அக்கறை என்பது ஒன்றுகலந்துள்ளது. மொபிடெலின்; வாடிக்கையாளர் மைய அணுகுமுறையானது அதன் உற்பத்திகள் யாவும் வசதி மற்றும் வேகத்தை உள்ளடக்கி வாடிக்கையாளரை வலுவடையச் செய்கிறது. தேசிய மொபைல் சேவை வழங்குனரான மொபிடெல் அதிநவீன தொழில்நுட்ப புதுமைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, பொழுதுபோக்கு மற்றும் மொபைல் பணத்துறை போன்ற பிரிவுகளுக்கும் அதை விஸ்தரித்துள்ளதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிக பெறுமதியை வழங்குகிறது.

SLIM  ஆனது, வர்த்தக நாம மேம்பாடு, விற்பனை, விளம்பரங்கள் மற்றும் ஆராய்ச்சி போன்ற துறைகளில் மூலோபாயம் மற்றும் விளைவுகள் சார் சிந்தனைகளுக்கு SLIM Brand Excellence  விருதுகள் –  NASCO, Effies மற்றும் People’s Awards மூலம் ஊக்கமளிக்கிறது. இது பற்றிய அனைத்து மேலதிக தகவல்களும், ஆவணங்களும் SLIM Brand Excellence இணையதளமான www.slimbe.lkஇல் கிடைக்கும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading