Local

3 அமைச்சர்கள், 17 இராஜாங்க அமைச்சர்கள், 7 பிரதி அமைச்சர்கள் மைத்திரி முன்னிலையில் பதவியேற்பு!

புதிய அரசில், அமைச்சரவையில் இடம்பெறாத 3 அமைச்சர்கள், 17 இராஜாங்க அமைச்சர்கள், 7 பிரதி அமைச்சர்கள் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இந்த நிகழ்வில், ஊடகவியலாளர்களோ, வேறெந்த விருந்தினர்களோ அனுமதிக்கப்படவில்லை.

நேற்றுமுன்தினம் 29 அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் பதவியேற்றிருந்த நிலையில், நேற்று அமைச்சரவையில் இடம்பெறாத 3 அமைச்சர்களாக ஹர்ஷ டி சில்வா, அஜித் பெரேரா, சுஜீவ சேனசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட்டுள்ளதால், அமைச்சரவையில் இடம்பெறாத அமைச்சர்களாக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நியமிக்கப்பட்ட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்களாவர்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசுடன் இணைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவருக்கும் பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவையில்
இடம்பெறாத
அமைச்சர்கள்

1. ஹர்ஷ டி சில்வா – பொருளாதார சீர்திருத்தம் மற்றும் பொது விநியோக அமைச்சர்.

2. அஜித் பி பெரேரா – உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்.

3. சுஜீவ சேனசிங்க – விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்.

இராஜாங்க அமைச்சர்கள்

1. விஜயகலா மகேஸ்வரன் – கல்வி இராஜாங்க அமைச்சர்.

2. ரஞ்சன் ராமநாயக்க – நெடுஞ்சாலை மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.

3. ஜே.சி. அலவத்துவல – உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை இராஜாங்க அமைச்சர்.

4. ருவான் விஜேவர்தன – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.

5. நிரோஷன் பெரேரா – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதாரத்துறை இராஜாங்க அமைச்சர.

6. சம்பிக்க பிரேமதாஸ – மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர்.

7. எரான் விக்கிரமரத்ன – நிதி இராஜாங்க அமைச்சர்.

8. அலி சாஹிர் மௌலானா – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்.

9. அமீர் அலி – விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.

10. ரஞ்சன் அலுவிகார – சுற்றுலா அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.

11. வசந்த அலுவிகார – விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

12. லக்கி ஜயவர்தன – நகர திட்டமிடல், நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர்.

13. அசோக அபேசிங்க – போக்குவரத்து சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர்.

14. பைசல் காசிம் – சுகாதார போசனை, சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர்.

15. எச்.எம்.எம். ஹரீஸ் – மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்.

16. திலிப் வெதஆரச்சி – மீன்பிடி, நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.

17. வடிவேல் சுரேஷ் – பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்.

பிரதி அமைச்சர்கள்

1. நளின் பண்டார – அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை பிரதி அமைச்சர்.

2. புத்திக பத்திரண – கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதி அமைச்சர்.

3. அனோமா கமகே – பெற்றோலிய வள அபிருத்தி பிரதி அமைச்சர்.

4. எட்வட் குணசேகர – காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அலுவல்கள் பிரதி அமைச்சர்.

5. அஜித் மன்னப்பெரும – சுற்றாடல்துறை பிரதி அமைச்சர்.

6. கருணாரத்ன பரணவிதான – திறன் விருத்தி, தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர்.

7. பாலித குமார தெவரப்பெரும – சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading