Sports

மும்பை வெற்றி நடை! அசத்திய சகோதரர்கள்!!

12-ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்று (18)  டில்லியில் நடைபெற்ற ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி, 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வென்றது.

நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தலைவர் ரோகித் சர்மா முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, டி காக் களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே இரு வீரர்களும் சிறப்பாக அடித்தாடினர். ரோகித் 30 ஓட்டங்களிலும், டி காக் 35 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து பென் கட்டிங் 2 ஒட்டங்களிலும் , சூர்யகுமார் யாதவ் 26 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 15 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். இதில் மூன்று சிக்ஸர்களும், இரண்டு பவுண்டரிகளும் அடங்கும்.

இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட்டுக்கு 168 ஓட்டங்களைக் குவித்தது. குருனால் பாண்ட்யா 37 ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

பின்னர் 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஒவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

டெல்லி அணியில் பிரித்வி ஷா 20 ஓட்டங்களும் , தவான் 35 ஓட்டங்களும் , அக்சார் பட்டேல் 26 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

மும்பை அணி பந்துவீச்சாளர் ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading