Local

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டார் நதீமால் பெரேரா – மாகந்துர மதூஷ் நாளை நீதிமன்றில் ஆஜர்

போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேரா , சிறைச்சாலை அதிகாரி லலித் குமார ஆகியோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (27ஆம் திகதி) அதிகாலை டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் நாடு திரும்பினர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நதீமால் பெரேரா , லலித் குமார ஆகியோரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இதேவேளை, டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதூஷ், பாடகர் அமல் பெரேரா உள்ளிட்டோர் நாளை (28ஆம் திகதி) அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading