Local

Omicron வைரஸின் ஆபத்தான அறிகுறிகள்!

கொரோனாவில் இருந்து உருமாறிய புதிய வகை Omicron வைரஸின் முக்கியமான ஐந்து அறிகுறிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரே வார்த்தை Omicron. இதற்கு காரணம், Omicron மாறுபாட்டினால் தான் மீண்டும் கொரோனா உச்சம் அடைந்து வருகின்றது. Omicron நினைத்ததை விட அதிவேகமாக பரவுகிறது.

ஆகவே அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள அறிகுறிகள் தென்பட்டவுடனே மருத்துவமனை சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Omicron வைரஸை பொறுத்தவரை ஆரம்பத்தில் மற்ற கொரோனா உருமாற்றங்கள் ஏற்படுத்திய அறிகுறிகளை தான் உண்டாக்கியது. ஆனால் தற்போது புதிய அறிகுறிகளும் தென்படுகின்றன.

நீங்கள் தொடர்ந்து சோர்வாக உணர்ந்தாலோ அல்லது இடுப்பின் கீழ் பகுதியில் தாங்க முடியாத வலி ஏற்பட்டாலோ அது Omicron வைரஸின் முக்கிய அறிகுறி.
Omicron-னின் முதற்கட்ட அறிகுறி என்னவென்றால் நகங்கள் சாம்பல் மற்றும் நீல நிறத்தில் மாறுவதாகும். இது இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படுவதாக கூறப்படுகின்றது.
உங்கள் தோலில் திடீர் புள்ளிகள் இருந்தால் அல்லது தோல், உதடுகள் நீல நிறமாக மாறினால் நீங்கள் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.
திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது மார்பு இறுக்கமாக உணர்ந்தாலோ அதுவும் Omicron-னின் ஒருவகை அறிகுறி ஆகும்.
இரவில் தூங்கும் போது திடீரென்று அதிகளவில் வியர்த்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.   

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading