EastLead NewsLocal

மட்டு. கண்ணகிபுரத்தில் கொடூரம்; குடும்பஸ்தர் எரித்துப் படுகொலை!

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை, கண்ணகிபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் பெற்றோல் ஊத்தி எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நாகன் சாமியன் என்ற குடும்பஸ்தரே இன்று திங்கட்கிழமை மாலை இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரைப் பெற்றோல் ஊத்திப் படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் 37 வயதுடைய ரஞ்சன் என்பவர் வாழைச்சேனைப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் இருவருக்கும் இடையில் ஆரம்பமான வாய்த்தர்க்கம் இறுதியில் கொடூரமான கொலைச் சம்பவத்துடன் முடிவடைந்துள்ளது.

சந்தேகநபர், வாழைச்சேனைப் பொலிஸாரின் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

பெற்றோல் தீயில் எரியுண்டு கருகிய குடும்பஸ்தரின் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading