Local

நாடாளுமன்றக் குழப்பம்: விசாரணை சி.ஐ.டியிடம்!

நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை, மிளகாய்த்தூள் வீசப்பட்டமை, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தற்போது பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகின்றது.

அத்துடன் சபாநாயகர் கரு ஜயசூரியவின் கையொப்பத்துடன் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட கடிதம் தொடர்பிலும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading