LocalNorth

கொக்குவிலில் ரௌடிகள் பெற்றோல் குண்டு வீச்சு! – வீடு, வாகனங்கள் எரிந்தன

யாழ். கொக்குவிலில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்கியதுடன், வீட்டில் நின்ற வாகனத்தின் பெற்றோல் ஊற்றி கொளுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர் ரௌடிகள்.

கொக்குவில் கருவப்புலம் பகுதியிலுள்ள வீடொன்றின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று மதியம், நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டுக்கும் அதிகமான ரௌடிகள் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

பெற்றோல் குண்டு தாக்குதலில் வீட்டின் முன்பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனம் ஒன்று, இரண்டு மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமாகின. அத்துடன் வீட்டின் முன்பகுதியும் எரிந்தது.

வீட்டில் ஆட்கள் இருந்தபோதும், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

எனினும், வீட்டில் தீப்பற்றியது. உடனடியாக, யாழ் மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினருக்கு வீட்டார் தகவல் வழங்கினர். அங்கு சென்ற தீயணைப்பு பிரிவினராலும் வாகனங்களில் பற்றிய தீயை அணைக்க முடியவில்லை. எனினும், வீட்டில் பரவிய தீயை அணைத்தனர்.

கோப்பாய் பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading