LocalNorth

யாழில் ஊடகவியலாளர் மீது பொலிஸ் அதிகாரி தாக்குதல்!

யாழ்ப்பாணம், கொக்குவிலில் இன்று பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரின் வாயில் குத்தி, காயப்படுத்தியுள்ளார் பொலிஸ் அதிகாரியொருவர்.

இந்தச் சம்பவம் தொடா்பாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளா் தகவல் தருகையில்,

“சம்பவ இடத்தில் செய்தி சேகாிப்பதற்காக நான் சென்றிருந்தபோது அங்கே பொலிஸாரும் நின்றிருந்தனா். வழக்கம்போல் நான் சற்றுத் துாரமாக நின்று வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தேன்.

அப்போது என்னருகில் வந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாாி ஒருவா் அங்கிருந்து செல்லுமாறு கூறினாா்.

அதற்கு நான் ஒரு ஊடகவியலாளா். எனது கடமையை நான் செய்து கொண்டிருக்கிறேன் எனக் கூறியபோது சடுதியாக எனது வாயில் குத்தினாா்.

நான் நிலைதடுமாறி கீழே விழப் பாா்த்தபோதும் ஒருவாறு சுதாகாித்துக் கொண்டு எழுந்துவிட்டேன்.

பின்னா் எனது வாயிலிருந்து இரத்தம் வடிந்தவாறு இருந்தமையால் நான் அங்கிருந்து விலகி வந்துவிட்டேன்.

இந்த விடயம் தொடா்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளேன்” – என்றாா்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading