Local

வாள்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கோரிக்கை

சட்ட விரோத வாள் கத்தி உள்ளிட்டவற்றை வைத்திருப்போர் அவற்றை இன்றும் – நாளையும் அருகில் உள்ள பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு பொதுமக்களை பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவான் குணசேகர தெரிவிக்கையில், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரின் சீருடைக்கு சமமான உடைகளை வைத்திருப்பார்களாயின் அவற்றையும் அன்றைய தினமே பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

புறம்பான வகையிலான கத்தி போன்ற ஆயுதங்கள் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த தினங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இவ்வாறான ஆயுதங்களும்,

சீருடைகள் பலவும் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவான் குணசேகர கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading